விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான சாதனையாக, பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந் துள்ள னர். இந்தத் தகவலை பகிர்ந்துக் கொண்ட மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச் சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், பூமியில் இருந் து 9.3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பால்வெளி ஒன்றில் இருந்து அதிக அளவி லான புற ஊதா கதிர்களை இந்தியாவின் முதல் பல்நோக்கு-அலைநீள விண்வெளி ஆராய் ச்சி நிலையமான ‘அஸ்ட்ரோ சாட்’ கண்டறிந்துள்ளது பெருமைக்குரியது என்றார். விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறனை மீண்டுமொருமுறை உலகத்துக்கு நிரூபித்து காட்டிய தற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.