பீட்ஸ் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்க கூடாது : முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை

மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:
 
தமிழ் திரையுலகில் தனது வசனங்களின் மூலம் முற்போக்கு சிந்தனைகளை முத்தறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அவர் திரைப்படங்களின் எழுதிய வசனங்கள் இன்றைய திரையுலகில் கதாநாயகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில திரைப்படங்கள் அமைந்திருந்தாலும், பல திரைப்படங்கள் வன்முறை, தீவிரவாதம் போன்ற காட்சிகளை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. திரைப்படங்களை பார்த்து இன்றைய இளைஞர் பட்டாளம் சீரழிந்து கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை. தொன்று தொட்டு இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அன்றைய காலக்கட்டத்தில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் என்பது குறைவாக இருந்த காலக்கட்டம். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. மதத்தை வைத்து மக்களை பிரிக்கும் செயலை மதவாத சக்திகள் தங்களது முழுநேர பணியாக செய்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் வெந்த புண்ணில் வெந்நீரை உற்றுவது போல, நடிகர் விஜய் நடித்து ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வரவுள்ள, பீட்ஸ் திரைப்படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து மைய கருவாக வைத்து இத்திரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தான் குவைத்தில் பீட்ஸ் திரைப்படத்தை வெளியிட தடை உள்ளதாக தகவல் வருகிறது.
 
இந்த தகவல் உண்மையென்றால் சர்ச்சைகுரிய காட்சிகள், வசனங்களை நீக்கி வேண்டும். அப்படி நீக்கவில்லை யென்றால் பீட்ஸ் திரைப்படத்தை வெளியிட மாண்புமிகு தமிழக முதல்வர் அனுமதி அளிக்கக்கூடாது என இந்திய தேசிய லீக் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். இஸ்லாமியர்கள் தற்போது ரமலான் மாத புனித நோன்பு காலத்தில் பயணித்து வருகின்றனர். ஆகவே பீஸ்ட் திரைப்படம் வெளியாகி, இஸ்லாமிய மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடாத வகையில், பீட்ஸ் திரைப்படத்திற்கு தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டுமென மீண்டுமொரு இந்திய தேசிய லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.