ஜூலை 12, 2020. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உலகளாவிய பல்வேறு உயர்மட்டப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை ஆராய்ந்து, புதுமைகளைப் புகுத்தி புதிய இந்தியாவை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கடைசி மைல் எரிசக்தி அணுகல் குறித்து அவர் வெளி நாட்டு இளம் இந்திய அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் குழுவுடன் நேற்று எழுச்சியுடன் உரையாடினார்.
மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் லீட் இந்தியா குழுமம், திங்க் இந்தியா பர்டூ, டெவலப் எம்பவர், சினெர்ஜைஸ் இந்தியா குழுமத்தால் இந்த இணைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் எரிசக்திப் பார்வையை விவரித்த திரு. பிரதான், “இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான பாதை வரைபடத்தை மாண்புமிகு பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார், இது அனைவருக்கும் கிடைக்க்கூடிய மற்றும் அணுகக் கூடிய வகையில் எரிசக்தி, ஏழைகளுக்கு மலிவான விலையில் எரிசக்தி, எரிசக்திப் பயன்பாட்டு செயல்திறன், பொறுப்புள்ள உலகளாவிய குடிமகனாக காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான எரிசக்தி நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைத் தணிப்பதற்கான எரிசக்திப் பாதுகாப்பு.” ஆகிய முக்கிய ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது, பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி பேசிய அமைச்சர் பிரதான், “நாங்கள் 2016ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். திட்டமிடலுக்கு முன்பே 80 மில்லியன் வாடிக்கையாளர்கள் இலக்கை நாங்கள் அடைய முடியும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம், இந்தியாவில் 98 சதவீத வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் இப்போது கிடைக்கின்றன, இது 2014ஆம் ஆண்டில் வெறும் 56 சதவீதமாக இருந்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் தன்னம்பிக்கை குறித்து திரு. பிரதான் கூறுகையில், “2022ஆம் ஆண்டில் எரிசக்தி இறக்குமதி சார்பு நிலையில் 10 சதவீதத் தைக் குறைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இது தொடர்பாக, அரசாங் கம் கொள்கையளவில் சில மாற்றங்களைச் செய்துள்ளதுடன், நிர்வாக ரீதியாகவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. “எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத் தால் இந்தியாவில் மாற்றம் குறித்துப் பேசிய அவர், கோவிட் – 19 காரணமாக பல சவால்கள் இருந்த போது “ஆசியாவில் எரிவாயுத் தேவை வளர்ச்சியின் முதன்மை இயக்கிகளில் ஒன்றாக இந்தியா உருவாக உள்ளது, என்றார். இன்று, இந்தியாவின் எரிசக்திக் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கு சுமார் 6.3 சதவீதமாகும். 2030க்குள் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்துவதற்கான லட்சிய இலக்கை நாங்கள் எடுத்துள்ளோம். ”தற்போதைய தொற்றுநோய் குறித்து பேசிய, திரு பிரதான், நமது வாழ்க்கையின் அடிப்படை அனுமானங்களுக்குச் சவால் விடும் கோவிட் -19 தொற்று நோய்ப் பரவலின் இடை நிலையில் நாம் இருக்கிறோம். உடனடிப் பொருளாதாரத் தாக்கம் நம்மை மெதுவாக்கலாம் என்றாலும், இடை நிறுத்தவும், மறுபரிசீலனை செய்யவும், மறுவடிவமைப்பு செய்யவும் நமக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.” என்றார்.