புதுடெல்லி , ஜூலை. 19: புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர். உடன் மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவா, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முன்னாள் ஒன்றிய அமைச்சர், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கூடுதல் தலைமைச் செயலாளர், புதுடெல்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளர் -1 டாக்டர். ஜக்மோகன் சிங் ராஜு இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.