-ஷேக்மைதீன்-
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குதான் முக்கியம்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் இனி எங்களது நடவடிக்கை இருக்கும்” என்று திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா தெருவித்து உள்ளார்.
டிஐஜி ஆனிவிஜயா செய்தியாளர்களிடம் பேசியதாவது; இது கொரோனா காலகட்டம் அதனால், போலீசார் – பொதுமக்களின் நல்லுறவு குறித்து தான் அதிக கவனம் செலுத்த உள்ளோம். எனவே உட்கோட்ட அளவில் அனைத்து போலீசாருக்கும் பொதுமக்களை நட்புடன் கையாள்வது எப்படி? என்பது குறித்த மேலாண்மை பயிற்சி அளிக்க இருக்கிறோம்.பொதுமக்களும் தயக்கமின்றி எந்நேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து திருச்சி சரகத்தில் பணியாற்ற போகிறேன்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் எங்களது நடவடிக்கை இருக்கும். அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவை.
போலீசார் தினமும் பல தரப்பட்ட மக்களுடன் பழகி வருகிறார்கள். இதனால், அவர் களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு
காணப்படும். போலீசாருக்கும், மனதையும், உடலையும் பக்குவப்படுத்தும் வகையில், யோகா, நிர்வாகம், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீ சாருக்கு மன அழுத்தம் அதிகம் இருக்கலாம். அதை நிர்வகிக்கும் திறனையும், பக்குவத்தையும் மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.