சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, சென்னை W.6 அயனாவரம் மற்றும் W.7 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பிரிக்ங்லிங் ரோடு, புரசை வாக்கம் மற்றும் தி ராயல் என்கிளேவ், அண்ணாநகர் பகுதி பொது மக்களுக்கு இன்றைய கால கட்டத்தில் கணினி வழி குற்றங்களான மின்னஞ்சல் மூலம் கொடுமைப்படுத்துதல் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உட்படுத்துதல் இணையதளம் மூலம் மிரட்டி கொடுமைப்படுத்துதல் உடற் தேய்ப்பு பணி ஆகிய குற்றங்களை பற்றிய விழிப்புணர்வு பற்றியும் இக்குற்றங்களால் பாதிக்கப் பட்ட நபர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும், சம்மந்தப்பட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்றும், யாராவது சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் அதை பற்றியும் தகவல்களை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் இணையதள பாதுகாப்பு குறித்தும் யாரேனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ID, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் கணினிகளை பயன்படுத்தவும், தற்போது குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களிடம் அலைபேசி மற்றும் கணினியை கையாளும் பொழுது பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பது மிகவும் அவசியம் மற்றும் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் சுகாதார பணியாளர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆகியோர்களிடம் குழந் தைகளை தனியே விடக்கூடாது என்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எதையும் வாங்கக் கூடாது என்றும் நன்கு தெரிந்த நபர்களாக இருந்தால்கூட பாதுகாப்புடனும், எச்சரிக் கையுடனும் இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் இத்தகைய குற்றங்கள் ஏதேனும் நடந்தால் தயக்கமின்றி காவல்துறையை அணுகலாம் என்றும் இதற்காக காவலன் SOS செயலி மற்றும் 1091, 1098, 9150250665 (Whatsapp) எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.