பெரியார் நெடுஞ்சாலையின் பெயரை மாற்றியதற்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை பெருமாநகரில் கடந்த 1979 ஆம் ஆண்டில், பெரியார் ஈ.வெ.ரா. நூற்றாண்டு விழாவையொட்டி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்முயற்சியில் பூந்த மல்லி நெடுஞ்சாலைக்கு “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலை” என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 42 ஆண் டுளாக மக்கள் பயன்பாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. நெடு ஞ்சாலை என்ற பெயர் மக்கள் பயன்பாட்டில் நிலைத்து நிற்கிறது. இந்த நிலையில் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரை நீக்கிவிட்டு, “கிராண்ட் வெஸ்ட்ரன் டிரங்க் ரோடு” என பெயர் மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜகவின் அதிகார மிரட்டலுக்கு அடிபணிந்து கிடந்த எடிப்பாடி ஆட்சியில் பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட்டன. பெரியார் பற்றி ஆபாசமாக பேசி இழிவுபடுத்தினர். கருப்புச் சட்டைக்கு காவி சாயம் பூசிப் பார்த்தனர். காவி ஆடை யுடுத்தி அவமதித்தனர். இந்த இழிசெயலில் தொடர்ந்து ஈடுபட்ட கும்பலை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது 40 ஆண்டு களுக்கும் மேலாக மக்கள் பழகிப்போன, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் சூட்டப்பட்ட பெரியார் ஈ..வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றப்படுகிறது என்றால் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு தெரியாமல் நடந்ததா? யார் நிர்பந்தம் கொடுத்தது, பெரியாரின் பெயரை தமிழ்நாட்டில் நீக்கும் துணிவு எப்படி வந்தது? எவர் ஒருவரும் வெட்கப்பட வில்லையா? இந்த அக்கிரமச் செயலை தடுக்கும் முதுகெலும்பு கொண்ட எவரும் ஆளும்தரப்பில் இல்லையா? வெட்கம், வெட்கம். இதனை ஒரு கண மும் சகித்துக் கொள்ள முடியாது உடனடியாக பெயர் மாற்ற உத்தரவை ரத்து செய்து, பெரியார்
ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் நிரந்தரமாக நீடிக்கும் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்