சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறை களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம் 12.00 மணி முதல் 01.00 வரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண் மூலம் தொடர்பு காவல் ஆணையாள ரிடம் புகார் தெரிவிக்கலாம் என்ற புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ஏற்கனவே தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, 06.07.2020 அன்று திங்கட்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் பொதுமக்கள் மேற்கண்ட கட்செவி (WhatsApp) எண் மூலம் காணொளியில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். இன்றைய புகாரில் காசோலை மோசடி, சொத்து பிரச்சனை, பணம் ஏமாற்றம், குடும்ப பிரச்சனை, இ-பாஸ், அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனை போன்ற புகார்கள் இருந்தன. மேற்படி புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.