பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய் தார் மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 08.09.2020 அன்று மாலை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். சாலையில் முககவசம் சரிவர அணியாமல் வந்த பொதுமக்கள் சிக்னல் மற்றும் பஸ் நிறுத்தங்களில் நின்றிருந்த பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முககவசம் அணிவது அவசியம் என்றும், சமூக இடைவெளியை கடை பிடிப்பது பற்றியும் அறிவுரை வழங்கினார். மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங் கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் புதிய முககவசங்களை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது கூடுதல் ஆணையாளர் (தெற்கு) தினகரன் இணை ஆணையாளர் (கிழக்கு) R.சுதாகர், இணை ஆணையாளர் (தெற்கு) ஏ.ஜி.பாபு, போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) லட்சுமி, மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.