ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும், மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக 6 மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் இருந்து வருகிறார்கள். இதில் இரண்டு மருத்துவர்கள் உடல்நலம் பாதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22.08.2019 அன்று மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாளப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
இதுவரை அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசாததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டி வருவதும் கண்டனத்திற்குரியது. போராடும் மருத்துவர்கள் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
அன்புள்ள
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்