முகக்கவசம் அணியாமல் வந்த நண்பருக்கு ரூ.200 அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்து போலீசை மிரட்டினார். போலீசுக்கு செல்லபாண்டியன் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மிரட்டலை அடுத்து செல்லபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் தேடி வந்த நிலையில் அவினாசியில் கைது செய்யப்பட்டார்.