மகளுக்குப் பாலியல் தொந்தரவு.. பாஜக பிரமுகர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியில் வசிப்பர் 47 வயதான பாரதி. பாஜகவில் எஸ்.சி பிரிவின் நகரத் தலைவராக உள்ளார். இவர் இந்து திருமணச் சட்ட விதியை மீறி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அடுத்தடுத்து திருமணமங்களை செய்துகொண்டுள்ளார்.

பாரதியின் நான்காவது மனைவிக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையிடம் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை குழந்தை தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். தனது கணவரிடம் கேட்டபோது, “நான் அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சத செய்துக்க” என்றாறாம் திமிருடன். தொடர்ச்சியாக 10 வயது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்தவன் மீது கோபம் கொண்டு, அந்தப் பெண்ணின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற போலீசார், பாரதியை அழைத்துவந்து விசாரித்துள்ளனர். “நான் யார் தெரியுமா” என காவலர்களையும் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து புகாரின் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்த போலீசார் வழக்குப் பதிவுசெய்து பாரதியை கைது செய்தனர்.

சென்னை பத்மசேஷாத்திரி பாலபவன் பள்ளியில் கணிதவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு தந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகாராகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த சிலர் பாலியல் வழக்கில்  ஒ ஆசிரியருக்கு சாதகமாக பேசிவரும் நிலையில், பாஜக பிரமுகர் ஒருவர் தனது 10 வயது மகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.