செங்கல்பட்டு, ஆகஸ்ட். 4: மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமேரவேல் நேற்று, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமநல்லூர், திருமுக்காடு, விலான்காடு, கோட்டகயப்பாகம், மதூர், காட்டுக்கரனை, எலப்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தினார்.