இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த அறிஞர்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தொன்மை கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்டது தமிழ் சமூக கலாச்சாரமாகும். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற மரபில் வளர்ந்து அறிவியல் தளத்திலும் முத்திரை பதித்துள்ள மூத்த கலாச்சாரத்திற்கு ஆய்வுக் குழுவில் இடமளிக்க மறந்தது அல்லது மறுத்தது உள்நோக்கம் கொண்ட செயலாகும். மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களை சேர்க்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.