மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்திய அரசாங் கத்தின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் மிசோரம் சுற்றுலா அமைச் சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட், கமிஷனர் மற்றும் மிசோரம் அரசு சுற்றுலாத்துறைச் செயலாளர் எஸ்தர் லால்ருவாட்கிமி முன்னிலையில், புதுடில்லியில் திறந்து வைத்தார். புதிய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின்கீழ் தென்சால் மற்றும் தெற்கு மண்ட லத்தில் சுதேஷ் தரிசனம்- வடகிழக்கு சுற்று, மாவட்ட செர்ஷிப் மற்றும் ரெய்க், மிசோரம் ஆகியவற்றின் கீழ் அனுமதிக்கப்பட்ட தொகை ரூ 92.25 கோடி, அதில் ரூ 64.48 கோடி தென்சாலில் கோல்ஃப் கோர்ஸ் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.