புதுச்சேரி, ஆகஸ்ட் 11, 2020: சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு மட்டும்தான் காந்தியின் கருத்துக்கள் பயன் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அவருடைய நல்லிணக் கம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியமான கருத்துக்கள் மனித குலத்திற்கு எல்லாக் காலத்திற் கும் தேவையானவை ஆகும். அறம் சார்ந்த கேள்விகள்தான் காந்தியத்தின் அடிப்படையாக இருக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தான் காந்தியின் கருத்துக்கள் நமக்கு அதிக அளவில் தேவைப்படுகின்றன. மது மற்றும் தங்கத் தின் நுகர்வு மோகமாக மாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற கருத்தாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும் என்று சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிட்டார்.
மத்தியஅரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகமும் நேரு யுவ கேந்திராவும் இணைந்து இன்று (11-08-2020) முற்பகல் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நடத்திய ”மகாத்மா காந்தியும் வெள்ளையனே வெளியேறு இயக்கமும்” என்ற காணொளி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய போது பாவண்ணன் இவ்வாறு தெரிவித்தார். பெண்கள் தைரியமாகவும் பாதுகாப்புடனும் அரசியலில் ஈடுபட அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் காந்தியாவார். அவரது மனைவி கஸ்தூர்பா காந்தி அதை செயல்படுத்திக் காட்டினார். தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங் களும் மக்கள் ஆற்றிய தியாகங்களும்தான் நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தன. காந்தி தனித்துவம் மிக்கவராக இருந்த போதும் அவர் என்றுமே தனித்து நிற்க விரும்பியவர் இல்லை. எல்லோருடனும் இணைந்தே செயலாற்றினார். அவருடைய விழுமியங்களையும் கருத்துக் களையும் இன்றைய இளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாவண்ணன் மேலும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அருங்காட்சியகம் ஆகியவற்றின் இயக்குனரான அ.அறிவன் தலைமை வகித்தார். காந்தி தொடர்பான ஆசிரமங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இந்தியாவில் எங்கெங்கு உள்ளன என்று பட்டிய லிட்ட அறிவன் காந்தியின் அடிப்படை அறக்கோட்பாடுகளான அன்பு மற்றும் அகிம்சையை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்று தனது தலைமையுரையில் குறிப்பிட்டார். துவக்க வுரை ஆற்றிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குனர் ஜெ. காமராஜ் அகிம்சைதான் சிறந்த போராட்ட ஆயுதம் என்று உலகத்திற்கு நிருபித்தவர் காந்தி என்றார்.
1942 ஆகஸ்டில் தொடங்கிய செய் அல்லது செத்துமடி என்ற முழக்கமும் வெள்ளை யனே வெளியேறு என்ற போராட்டமும்தான் அடுத்த 5 ஆண்டுகளில் சுதந்திரம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தின என்று காமராஜ் மேலும் குறிப்பிட்டார். நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் டி.தெய்வ சிகாமணி வாழ்த்துரை வழங்கினார். வரவேற்புரை ஆற்றிய மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் தி.சிவக்குமார், தன்னிறைவு பெற்ற கிராமம், கிராமத் தொழில்கள் ஆகியவை குறித்த காந்தியின் சிந்தனைகள் இன்றைய காலகட்டத்தின் சுயசார்பு இந்தியாவுக்கு முன்னோடி யானவை என்று குறிப்பிட்டார். பிறகு பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு எழுத்தாளர் பாவண்ணன் தக்க பதில்களை எடுத்துரைத்தார். களவிளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.