மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி

ஒரே வேளாண் சந்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகளை நான் நிறைவேற்றியதை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியதாவது:

வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை இந்த சபையில் நான் மீண்டும் படிக்க விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் தொடர்பாக தற்போது யு-டர்ன் செய்திருப்பவர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன். கடந்த 1930-களில் அமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் முறையால், நமது விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை அதிகமான லாபத்துக்கு விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது. அனைத்து விதமான தடைகளையும் நீக்குவதே எங்களுடைய நோக்கம். பரந்த அடிப்படையிலான பொதுவான ஓர் சந்தையை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்ய ஒரு சந்தை மட்டும் இருக்க வேண்டும் என்பதில் மன்மோகன் சிங் தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிவிட்டார். மன்மோகன் சிங் என்ன கூறினாரோ அதை மோடி இன்று செய்துவிட்டதை நினைத்து நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராகபோராடும் விவசாயிகளிடம் நான் கோருவது தயவு செய்து போராட்டத்தை நிறுத்துங்கள். புதிதாக ஒரு போராட்டக்காரர்கள் நம் நாட்டில் முளைத்துள்ளார்கள். இவர்களால் போராட்டம் இல்லாமல் வாழ முடியாது. இவர் களிடம் இந்த தேசம் கவனமாக இருக்கவேண்டும். சீ்க்கியர்கள் இந்த தேசத்துக்கு அளித்த பங்களிப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏராளமாந பங்களிப்புகளை சீக்கிய சமூகம் செய்துள்ளது. ஆனால், அவர்களில் சிலர் பயன்படுத்தும் வார்த்தைகள் நாட்டுக்கு பயன் அளிக் காது. சீக்கியர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சிலர் பேசி வருகிறார்கள். குரு சாஹிப்பின் வார்தைகள், ஆசிகள் விலைமதிப்பில்லாதது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.