ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மருந்தில்லா கரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காக்கும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரண மாக மார்ச் 24-ம் தேதிமுதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக செப்.30 வரை முடக்கம் தொடர்கிறது. ஆனாலும் பலமுறை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 மாதத்தில் தொற்று எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து 4.5 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் மரண எண்ணிக்கை, (7322) இரண்டாவது இடத்தில் உள்ள ஆந்திராவின் (4,34,771) மரண எண்ணிக்கையை விட(3969) இரு மடங்காக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. தலைநகர் சென்னையில் தொற்று எண்ணிக்கை 1,35,000 ஆக உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்தில் மாவட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில், வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொரு ளாதார சீரழிவை தடுக்கவே தளர்வு, நோய் முற்றிலுமாக விலகிவிடவில்லை, ஆகவே சுயக் கட்டுப்பாடு மட்டுமே நம்மை காக்கும் என கருத்து வெளியாகியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட் சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறை யும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு” என்று பதிவிட்டுள்ளார்.