மோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் ,பிரபுவும் மலையாள படமான “மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்”படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்குகிறார் . தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் நேரடி திரைப்படமாக மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகிறது . கலைப்புலி S தாணு தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார் , MS ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .ரோனி நபேல் இசையமைக்கிறார்,. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது .
தொழில்நுட்பக்குழு: எழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன், தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் ( ஆண்டனி பெரும்பவூர்), இணை தயாரிப்பு – DR ராய் CJ , சந்தோஷ் T குருவில்லா, தமிழ்நாடு வெளியீடு – V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு,தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில், வசனம் – RP பாலா, ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, இசை – ரோனி நபேல், பின்னணி இசை – ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்
நடனம் – பிருந்தா , பிரசன்னா, நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி ,ஜார்ஜ் டயல்