மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1644 விமானத்தில் பயணம் செய்த பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த கீதிர் நைனா முகமத் (50) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். விசாரணையின் போது அவர் தன் மலக்குடலில் தங்கப் பசையை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. அவரை சோதனையிட்ட போது அவரது மலக்குடலிலிருந்து 94 கிராம் எடையிலான 2 தங்கப் பசைப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது முழுக் கால் சட்டையின் பையில் 20 கிராம்
எடையிலான தங்க வெட்டுத் துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச் சட்டம் 1962ன் கீழ் அவரிடமிருந்து மொத்தம் 6 லட்ச ரூபாய் மதிப்புடைய 114 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றில்
தெரிவித்துள்ளார்.