கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தேர்வு நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட் டது. இந்த பேரிடர் காலத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, தேர்வுகள் நடத்தாமல், மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை தந்த நட்கள் போன்றவை களை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இறுதி யாக அண்ணா பல்கலைக் கழகம் உட்பட பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர் கள் இறுதிப் பருவ தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, தனித் தேர்வர் கள் உட்பட அனை வரும் அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் தனித் தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதும், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதும் யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிமுறைகளுக்கு எதிரானது என பல்கலைக் கழக இயக்குநர் அறிவித் திருப்பதும், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், மாண வர்கள். பெற்றோர்கள் மத்தியில் பெருங்குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பொறியியல் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்புக்கு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அமைப்புகள் ஒப்புதல் தெரிவித்து அறிவிப்பு வெளியிடவும், இதுவரை தனித் தேர்வு எழுத, தேர்வு கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களிடம், தேர்வு கட்டணத்தை வசூலித்து, அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.