மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது —————————

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள், ஆறு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை அடையாறு பகுதியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், இந்நாள் மற்றும் முன்னாள் மாணவியர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்தனர். இது குறித்து, கமிஷன் நிர்வாகிகள் விசாரித்தனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ராம்பிரசாத், ஹிந்தி ஆசிரியர் மகேந்திர குமார் ஆகியோருக்கு ‘சம்மன்’ அனுப்பினர். இதையடுத்து இருவரும் ஆஜர் ஆகினார்கள். இவர்களிடம், ஆறு மணி நேரம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயகுமார் உள்ளிட் டோர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவற்றை வாக்குமூல மாகவும் பதிவு செய்தனர். அதேபோல, புகார்தாரரிடமும் மிகவும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.