தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய மாபியா கும்பலை பற்றிய உண்மை கதை ” மாய மாளிகை ” K.N.பைஜூ இயக்குகிறார். தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ள படம் “மாயமாளிகை”. K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்கிறார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – அஜெய் ஸரிகமா, பாடல்கள் – சினேகன், கலை – பிஜு தாஸ், துணை இயக்கம் – ஜெயராஜ், இணை இயக்கம் – வி.பி.சுந்தர், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – A.P.கேசவ தேவ் கதை, திரைக்கதை, இயக்கம் – K.N.பைஜூ
படம் பற்றி நாயகனும், இயக்குனருமான K.N.பைஜூ கூறியதாவது. காதல், காமெடி, கலந்த ஹாரர் படம். சமூக சேவை செய்வது போல மக்களை நம்பவைத்து ஏமாற்றி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் ஒரு மாபியா கும்பலின் தலைவனை பற்றிய படம் இது. கோடாலிப்பரம்பன் என்ற காதப்பாதிரத்தில் வரும் அந்த மாபியா கும்பலின் தலைவன் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய புள்ளி. அவனை பற்றிய உண்மைக் கதை இது. கேரளாவில் பத்திரிகைகளில் இந்த படத்தின் கதையை சொன்னவுடன் இயக்குனர் கே.என்.பைஜுவிற்கு கொலை மிரட்டல்கள் வந்தன அதையும் பொருட்படுத்தாது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்திவருகிறார். விரைவில் திரையில் யார் அந்த மாபியா கும்பலின் தலைவன் என்பது வெளிச்சத்திற்கு வரும். மக்கள் தொடர்பு: மணவை பூவன்.