இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 15.08.2020 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாpயாதை செலுத்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடா;ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்து வ த்துறை காவல்துறை வருவாய்துறை ஊரக உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சார்ந்த 78 பணியாளர்களுக்கும் சமூக சேவையில் சிறந்து செயல்பட்ட 4 நபர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் கொரோனா தடுப்புப் பணியில் வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்த முன்களப் பணியாளர்களுக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பொதுமக்களுக்கும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 79 பயனாளிகளுக்கு ரூ.33 இலட்சத்து 24 ஆயிரத்து 606 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் என்.எம்.மயில்வாகனன் இ.கா.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி.வருண்குமார் இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார் இ.ஆ.ப. இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். அ.புகழேந்தி சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சிவசங்கரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.