மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 18.07.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற விதியின் 110-ன் கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 21.08.2019 முதல் 31.08.2019 வரையிலான நாட்களில் ‘முதலமைச்சாpன் சிறப்பு குறை தீர்வு திட்டம்” முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகள் வாரியாக பொதுமக்கள் சிரமமின்றி கோரிக்கை மனுக்களை வழங்கிட ஏதுவாக அந்தந்த கிராமப் பகுதிகளில் முகாம்கள் நடத்திட வருவாய்த்துறை ஊரகவளர்ச்சித்துறை நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்களை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அன்றைய தினமே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் குறை தீர்வு திட்டம் குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதோடு மனுக்கள் அனைத்தும் துறை வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கீழக்கரை வருவாய் வட்டம் ஆலங்குளம் கிராமத்தில் நடைபெற்ற ‘முதலமைச்சரின் சிறப்பு குறை
தீர்வு திட்டம்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது கீழக்கரை வருவாய் வட்டாட்சியர் திருமதி.சிக்கந்தர் பபிதா உடனிருந்தார்.