பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் நிதியாதாரத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடி குறித்து எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் இழப் பை ஈடுசெய்ய மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ12 ஆயிரத்து 250 கோடியை உடனடியாக வழங்குவதுடன், 2022 மார்ச் 31 வரையிலும் வழங்க வேண்டிய இழப் பீட்டுத் தொகையை முன்பணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோ னா நோய் பெருந்தொற்று தடுப்பு மற்றும் மருத்துவச் செலவினங்கள் அதிகரித்துள்ள துடன், ஊரட ங்கு காலத்தில் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு உதவும் நிவாரண நடவடிக்கைகளிலும் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாலும், அரசின் வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்பட் டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் முதல்வர், மத்திய நிதியமைச்சர், வருவாய்துறை செயலாளர் ஆகியோர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்த இரண்டு யோசனைகளும் மாநில நலனு க்கு எதிரானது என்பதை மெல்லிய குரலில் கூறியுள்ளார். இது போன்ற பேராபத்து வரும் என்ப தால் தான் ஜிஎஸ்டி வரிமுறைக்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு ஆதரவு நிலை எடுத்து மத் திய அரசிடம் சரணடைந்த மாநில அரசு, தற்போது நிதித் தேவைக்கு மத்திய அரசிடம் மன்றா டி வருகிறது. மத்திய அரசு சட்டப்பூர்வ நிதிப் பொறுப்புகளையும் அலட்சியப்படுத்தி வருகிறது. நிதியாதாரத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ்நாடு அரசின் நிலையினை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கடிதத்தின் உணர்வுகளை மதித்தும் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய, நிதிப் பாக்கிகளை உடனடியாக முழுமையாக வழங்க, பிரதமர், மத்திய நிதியமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று இரா. முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.