மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பக்குளம் நொச்சிக்குளம் மற்றும் ஆத்திக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களிலும் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டல மாணிக்கம் கிராமத்திலுள்ள கண்மாயிலும் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிளையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சாம்பக்குளம் ஊராட்சியிலுள்ள புது ஊரணி கமுதி ஊராட்சி ஒன்றியம் மண்டலமாணிக்கத்திலுள்ள வ.மூலக்கரைப்பட்டி ஊரணி ஆகிய ஊரணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் 21.08.2019 நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூயஅp;.37.59 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்வைகை வடிநில கோட்டம் பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பக்குளம் கிராமத்திலுள்ள கண்மாயில் ரூயஅp;.39 இலட்சம் மதிப்பிலும் நொச்சிக்குளம் கிராமத்திலுள்ள கண்மாயில் ரூயஅp;.36 இலட்சம் மதிப்பிலும் ஆத்திக்குளம் கிராமத்திலுள்ள கண்மாயில் ரூ.42 இலட்சம் மதிப்பிலும் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டலமாணிக்கம் கிராமத்திலுள்ள கண்மாயில் ரூ.80 இலட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டிற்குட்பட்ட விவசாய பாசனதாரர்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ள விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மேற் குறிப்பிட்டுள்ள கிராமங்களுக்கு இன்றைய தினம் 21.08.2019 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நோpடையாகச் சென்று குடிமராமத்து திட்டப் பணிகளை ஆய்வு செய்ததோடு விவசாய பாசனதாரர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திட வேண்டும். அதேபோல கண்மாய் புனரமைப்பு பணிகளை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றிட வேண்டும். கண்மாய் கரையினை பலப்படுத்தி கரையோரங்களில் அதிக அளவில் பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்திட வேண்டும். இதுதவிர கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல் நீர்பிடிப்பு பகுதிகளை தூர் வாருதல் நீர் வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல் மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கேற்ப சீரமைத்தல் புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்புனரமைப்பு
பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடனும் 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இக்குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தினை ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பாpசாக ரூ.10 இலட்சமும் 2-ஆம் மற்றும் 3-ஆம் பரிசாக தலா ரூ.5 இலட்சமும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.சிவராணி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவசாய பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.