தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த கோபிநாத்ரவி என்ற இளைஞர், மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவிலான ரூபரு மிஸ்டர்.இந்தியா பட்டத்திற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 34 இளைஞர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த போட்டி கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்றதோடு, ‘பீப்ள்ஸ் சாய்ஸ்’, அதாவது மக்களின் தேர்வு என்ற மாபெரும் விருதையும் வென்றார். இதுவரை தென்னிந்தியாவில் யாரும் வென்றிருதா இந்த படத்தை வென்ற கோபிநாத்ரவிதிற்கு தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. குறிப்பாக அவர் தமிழர் என்பதால், அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதனால், அவருடைய சோசியல் மீடியா பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்படி சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி வை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் நம்மிடம் அவருடைய மாடலிங் துறை மற்றும் மிஸ்டர் இந்தியா போட்டியின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். கல்லூரி காலத்திலேயே எனக்கு மாடலிங் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தேன். அதனால், அது தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதோடு, அதற்காக என்னை தயாரிப்படுத்தியும் வந்தேன். அப்போதே, மிஸ்டர்.சவுத், மிஸ்டர்.இந்துஸ்தான் போன்ற சில போட்டிகளில் கலந்துக் கொண்டு பட்டம் வென்றதோடு, பேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்தேன். பிறகு தான் மிஸ்டர்.இந்தியா போட்டி பற்றி அறிந்து அதில் கலந்துக் கொள்வதற்காக என்னை தயாரிப்படுத்தி வந்தேன். கோவாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துக் கொண்ட பிறகு தான் தெரிந்தது, இந்த பட்டத்தை இதுவரை தென்னிந்தியாவில் இருந்து யாரும் வென்றதில்லை என்று. அதனால், எப்படியாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன், இறுதியில் அதற்கான பலன் கிடைத்ததோடு, மக்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டது, என்று மகிழ்ச்சியோடு கூறியவரிடம், அடுத்த திட்டம் என்ன? என்று கேட்டதற்கு, அடுத்ததாக சர்வதேச அளவிலான பட்டத்தை வெல்ல வேண்டும். அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் உள்ள பிளோரிடாவில் ‘மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெறும் அப்போட்டியில் கலந்துக் கொண்டு பட்டம் வெல்ல வேண்டும், என்பது எனது அடுத்த லட்சியம், என்றார். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வருமே, உங்களுக்கு எப்படி? என்று கேட்டதற்கு, நிஜம் தான், நான் மாடலிங் துறையில் இருக்கும் போது எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தது. அதன்படி, பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘பகிரா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிய வேடமாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து மேலும், மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது, என்றார். உங்களுக்கு சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்கள் இருப்பதோடு, அவர்கள் உங்களை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சொல்கிறார்களே, அதுபற்றி..
ஆமாம், என் ரசிகர்கள் அவ்வபோது என்னை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க சொல்கிறார்கள். அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்ல போகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட மிகப்பெரிய அளவில் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க இருக்கிறது. அதில், நான் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறேன். இதுவரை எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சியும் ஒளிபரப்பாத நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி இருப்பதோடு, அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத இடங்களில் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி என் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, தொலைக்காட்சி உலகிற்கே மிகப்பெரிய் ஆச்சரியத்தை அளிக்கும், என்று உற்சாகத்தோடு தெரிவித்தார். மாடலிங் துறையில் சாதித்துக் காட்டிய கோபிநாத்ரவி, சினிமாத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக நடிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு தன்னை தயாரிப்படுத்தி வருகிறார். தற்போது சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கியிருப்பவர், விரைவில் அவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
மக்கள் தொடர்பு: தர்மா.