கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பொட்டிமுடி பகுதியில் பெய்த கனமழை யால் கடந்த ஆக. 6-ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனி யாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக தோட்டத் தொழிலாளா்கள் குடும் பங்களைச் சோ்ந்த 78 போ், அவா்களது வீடுகளில் தங்கியிருந்த உறவினா்கள் என மொத்தம் 96 போ் சிக்கினா். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் வியாழக்கிழமை வரை 25 ஆண்கள், 23 பெண்கள், 6 சிறுவா்கள், 9 சிறுமிகள், முறையே 6 மாதம் மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் என மொத்தம் 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில், 10 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி யுள்ளனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கேரள மாநிலம் மூணாறில் பொட்டிமுடி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
“தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களில் வீடு கட்டித் தர வேண்டும், ஒரு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், கல்வி மற்றும் சுகாதாரத்தை அளிக்க வேண் டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அரசுக்கு கோரிக் கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.