மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! வைகோ கண்டனம்

கர்நாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்றுநடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “ ‘நமது நீர், நமதுஉரிமைஎன்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்தத் திட்டத்தைச்செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும்.

நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்குகூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும்செய்துள்ளோம். இந்தத் திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும்வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்குகுடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராகஉள்ளதுஎன்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி-16 ) கர்நாடக சட்டப் பேரவையில் முதலமைச்சர் சித்தராமையாமாநில  அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது, “காவிரியின் குறுக்கே மேகதாதுஅணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேகதாது அணையைக் கட்ட ஒரு தனிமண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்துஇருக்கிறார்.

கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும்.

காவிரியில் நீரைத் தடுத்து,  9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்டமேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும்கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள்பாலைவனமாக மாறிவிடும்.

கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால்கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராகஅதிகரித்துவிட்டது.

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியேதீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர்சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாதுஎன்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.