கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2021 அன்று சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிரான குற்றங்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் சபதம் எடுத்து கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) ஒருங்கமைப்பில் கனடியதமிழர் சமூகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கனடிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள், ஒன்ராரியோ மாகாண முதல்வர், மாகாண நாடாளுமன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர பிதாக்கள், நகரசபை உறுப்பினர்கள், கல்விச்சபை உறுப்பினர்கள் மற்றும் ஐ.நா முன்னாள் உதவி செயலாளர் நாயகம் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அத்துடன் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், இம்முறை தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்ற அனைத்து நாடுகளிலும் 18-18-18 (அதாவது 18ம் திகதி 18 மணி 18 வது நிமிடத்தில்) தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கு தீபம் ஏந்தி வழிபாடு செய்யப்பட்டு இறுதி நிகழ்வாக பிரகடனம் வாசிக்கப்பட்டு உறுதி மொழி ஏற்று நிகழ்வு நிறைவு பெற்றது. பொது சுடர் ஏற்றி, கனடிய தேசிய கீதம், கொடிப்பாடல் அதனைத் தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் இடம் பெற்று 18-18-18 மணித்துளிக்கு தீபம் ஏற்றி வழிபாட்டுடன் நிகழ்வு ஆரம்பம் ஆகியது. தொடர்ந்து ஐ.நா முன்னாள் உதவி செயலாளர் நாயகம் Dr. Denis Halliday அமைச்சர் Mary NG, அமைச்சர் Ahmed Hussen, பாராளமன்ற உறுப்பினர் Gary Anandasangaree, பாராளமன்ற உறுப்பினர் Salma Zahid, பாராளமன்ற உறுப்பினர் Shaun Chen, பாராளமன்ற உறுப்பினர் Mark Holland பாராளமன்ற உறுப்பினர் Arnold Viersen, NDP கட்சியின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான Jagmeet Singh, பாராளமன்ற உறுப்பினர் Peter Julian, ஒன்டாரியோ முதல்வர் Doug Ford, ஒன்டாரியோ கல்வி அமைச்சர் Stephen Lecce, ஒன்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Vijay Thanigasalam, கனடிய தமிழர் தேசிய அவையின் தலைவர் Professor Sri Ranjan, CTYA உறுப்பினர் Kobina, ஒன்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Logan Kanapathi, ஒன்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Aris Babikian, ஒன்டாரியோ NDP கட்சி தலைவரும் மற்றும் ஒன்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Andrea Horwath, ஒன்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Doly Beggum, டொரோண்டோ நகரபிதா John Tory, பிராம்டன் நகரபிதா Patrick Brown, டொரோண்டோ கவுன்சிலர் Gary Crawford, டொரோண்டோ கவுன்சிலர் Cynthia Lai, பிராம்டன் கவுன்சிலர் Harkirat Singh, கல்விச்சபை உறுப்பினர் Yalini Rajakulasingam, கல்விச்சபை உறுப்பினர் Anu Sriskantharajah, கல்வி சபை உறுப்பினர் Parthi Kanthavel ஆகியோர் தமிழினப்படுகொலைக்களாகிய தமிழினத்திற்கு நீதி கோரி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து இறுதி நிகழ்வாக பிரகடனம் வாசிக்கப்பட்டு உறுதி மொழி ஏற்று நிகழ்வு நிறைவு பெற்றது.