விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளிலும், தங்கள் பகுதிகளிலும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பதாகைகள் மற்றும் போஸ்டர்களை ஏந்தியும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தையும் மேற்கொள்வார்கள் என்றும் பைஸி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை மோசமான சூழலில் உள்ள நிலையில் அதை மேம்படுத்த அக்கறை செலுத்தாமல் இந்த நாட்டின் செல்வங்களையும், வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க உதவுவதிலேயே மத்தியில் உள்ள பாஜக அரசு பரபரப்பாக உள்ளது என்று பைஸி தெரிவித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) சட்டப்பூர்வ உரிமை வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மோசமான வானிலை காரணமாக போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்த போதிலும், பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கவலைப்படவில்லை. விவசாயிகளைப் புறக்கணிப்பது மற்றும் விவசாய தலைவர்களுடன் பிடிவாதமான மற்றும் தந்திரமான நிலைப்பாடுகளை கடைப்பிடிப்பது என்று பாஜக அரசு உள்ளது.
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முதுகெலும்பாக விவசாயிகள் உள்ளனர். அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த பைஸி, விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பாஜக அரசின் அணுகுமுறை மற்றும் ஆணவப்போக்கு கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் நாட்டில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பைஸி எச்சரிக்கையாக தெரிவித்தார்.