விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், ஏர் அரேபியா விமானம் ஜி9-471 மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய, பெரம்பலூரை சேர்ந்த அஜித்குமார் பூமாலை, 22, என்பவரை விமான நிலைய த்தை விட்டு வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகா ரிகள் இடைமறித்து விசாரித்தனர். அவரை சோதனை யிட்ட போது, அவரது உடலில் மறைத்து வைக்கப் பட்டி ருந்த 385 கிராம் தங்கம் கண்டறியப்பட்டு சுங்க சட்டத் தின் கீழ் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ 18.55 லட்சம் ஆகும். இதே போன்ற மற்றொரு சம்பவத்தில், எமிரேட்ஸ் விமானம் ஈகே-542 மூலம் துபாயில் இரு ந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த நூர்முகமது உஸ்மான், 21, என்பவரை சுங்க அதிகாரி கள் இடைமறித்து விசாரித்தனர். அவரை சோதனை யிட்ட போது, அவரது உடலில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 185 கிராம் தங்கம் கண்டறியப்பட்டு சுங்க சட்டத்தின் கீழ் கைப்பற்றது. இதன் மதிப்பு ரூ 8.91 லட்சம் ஆகும். மொத்தம் ரூ 27.46 லட்சம் மதிப்பிலான 570 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப் பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைப் பெற்று வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.