‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு!

தஞ்சாவூர், ஜூலை. 11- சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை தொழிலதிபர் கொட்டப்பாக்கி ‘லக்கி’ சுலைமான் பாட்சா மற்றும் நடுக்கடை தொழிலதிபர் ‘பிளாக் துலிப்’ எஹியா ஆகியோரது இல்லத் திருமண விழா சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் நடைப்பெற்றது.

விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், இ.யூ.மு.லீ., கட்சியின் முதன்மை துணைத் தலைவர் மற்றும் முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இ.யூ.மு.லீ., கட்சியின் துணைத் தலைவர் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, முன்னாள் அமைச்சர் உபைதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், முன்னாள் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் என். ரெங்கசாமி,. திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்.

தொழிலதிபர்கள் ‘நோபல் மெரின்’ சாகுல் ஹமீது, ‘ஆரிஃபா’ சுல்தான் ஆரிஃபின், ‘பவர் குரூப்’ முகமது ஜாஹிர் ஹுசைன், ‘எஸ்.டீ. கொரியர்’ அன்சாரி மற்றும் சிராஜுதீன், ‘குவைத் சுப்ரீம் கார்கோ’ அபுபக்கர் சித்திக், புரூணை ஜபாருல்லாஹ், திருச்சி எம். சிராஜுதீன், ஆடுதுறை ஜமால் முகமது இப்ராஹிம், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், தங்கம் குழுமத்தின் பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், வாளன் ஜெய்லான்பாஷா.

அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் திருப்பனந்தாள் முகமது தாஹா, துபாய் சிராஜ், ஆவூர் பஷீர், சோழபுரம் ஷாஜகான், அய்யம்பேட்டை தம்பிதுரை, காரைக்கால் ஆரிப் மரைக்காயர், ஆடுதுறை ஷாஜகான், அய்யம்பேட்டை மில்லத் இஸ்மாயில், ராடின் ஐ.ஏ.எஸ். அகாடெமி ரஹமத்துல்லாஹ், இ.யூ.மு.லீ. செய்யாது பட்டாணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.