வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 22: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் திருச்சி தொழிலதிபர் எம். சிராஜுதீன் ஆகியோர் இல்ல திருமண விழா நேற்று சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர். காதர் மொகிதீன் தலைமையில், பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொதுச்செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரை முருகன், எ.வா. வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இராணிப்பேட்டை காந்தி, மா. சுப்ரமணியம், செஞ்சி மஸ்தான். அரசியல் கட்சி தலைவர்கள், கி. வீரமணி, வைகோ, ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., மல்லை சத்யா, கே.ஏ.எம். முகமது அபூபக்கர், தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி, சபரிமாளா. நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி கருணாநிதி, டி.ஆர். பாலு, திருநாவுக்கரசர், அ. ராசா, ஜெகத்ரசகன், நவாஸ் கனி, கதிர் ஆனந்த். சட்டமன்ற உறுப்பினர்கள், ஷாநவாஸ், ஹாசன் மௌலானா. ஜெ. கருணாநிதி. வஃக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் ஃபரிதா பானு, அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை, உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் பலர்.

 

தொழிலதிபர்கள், திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகமது ஷாபி, குவைத் லக்கி சுலைமான், துபாய் பிளாக் துலிப் எஹியா, கீழக்கரை அஹமது புஹாரி, அமெரிக்கா சந்திரசேகரன், துபாய் எம். நைனா முகமது, புரூணை ஜபாருல்லாஹ், சென்னை அமானுல்லா, புஹாரி ஹோட்டல் இயக்குனர் ருமைஸுதீன் பைஜி, தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முஹைதீன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், மயிலாடுதுறை சாதீக், இக்பால், சோழபுரம் ஷாஜகான், ஆடுதுறை ஜமால் முகமது இப்ராஹிம், ஆவூர் பஷீர் மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.