திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களைச் சார்ந்த வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், வணிகர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட சரக்குகள் மற்றும் அதன் வரிவிகிதங்கள் அடங்கிய விவரப் புத்தகத்தை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்.
விழாவில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சுற்றுச் சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் அரசு தலைமைக் கொறடா, முனைவர், கோ.வி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.