விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D. ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன்’ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் T.D. ராஜா தயாரிக்கிறார். மெட்ரோ பட புகழ் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் விஜய் ஆண்டனியின் 14 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது .
இசை – நிவாஸ் கே பிரசன்னா.
தயாரிப்பு – T D ராஜா
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்
ஒளிப்பதிவு – N S உதயகுமார்
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே.அஹமது