தமிழக பால்வளத்துறை அமைச்சரும்,விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின். பிறந்தநாளையொட்டி . அவருக்கு , விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ் ,அவரது மனைவி மாலாதங்கராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில்,ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி ஒன்றியத்திலுள்ள எரிச்சநத்தம்,நடையனேரி மற்றும் குமிழங்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாவட்ட கலைப்பிரிவு செயலாளரும் ,சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளருமான புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி மற்றும் அதிமுக கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ், மாலா தங்கராஜ் செய்திருந்தனர்.
விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ்.
