திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ் டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவல கங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்து விட் டனர். பாஜக – அதிமுகவின் தோல்வி பயத்தினால், திமுக மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய பிஜேபி அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரு கிறது. தேர்தல் பரப்புரை நிறைவு பெற இருக்கும் நேரத் தில், களப்பணி செய்யவிடாமல் தடுப்ப தற்காகவும், வாக்காளர்களிடம் சந்தேகத்தை விதைக்கும் நோக்கத் தோடும் செய்யப்படும் மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த விடாமல், ஜனநாயக விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கை களை தேர்தல் ஆணையம் தலையிட்டு தடுக்க வேண் டும். தமிழ்நாட்டு மக்கள், பிஜேபியின் இந்தத் தந்திர நடவடிக்கைகளை எல்லாம் நன்றாகப் புரிந்து வைத்தி ருக்கிறார்கள். பிஜேபி – அதிமுக கூட்டணியை தோற் கடித்து, திமுக தலைமையிலான கூட்டணியை பெரு வெற்றியடையச் செய்வார்கள்