தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதி ராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது சரி யே என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தூத்துக்குடி மக்களின் உயிர்களை மெல்ல மெல்ல காவு கொண்ட கொலை பாதக நிறுவனமான ஸ்டெர் லைட் நிறுவனத் திற்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் நடத்தி வந்த போராட் டத்தின் உச்சமாக 100 நாட்கள் தொடர் போராட்டம் நடை பெற்றது. அதன் இறுதியில் போராடிய மக்கள், பேரணி யாகச் சென்று, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் காவல்துறை நடத் திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்னோலின் என்கிற 17 வயது சிறுமி உட்பட, 13 பேர் கொல்லப்பட்டனர். கொலை பாதக ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தன்னெழுச் சியாக நடத்திய போராட் டத்திற்கும், அப்போராட்டம் காரணமாக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்களின் இன்னுயிரை இழந்தவர்களின் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்த ஆலைக்கு எதிராக இறுதிவரை போராடி சட்ட தீர்ப்பைப் பெற உதவியாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளை யும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் வேதாந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் அலையை அப்புறப் படுத்தும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தண்டிக்கப் படுவதும் வெகு விரைவில் நிகழும் என்றும் எதிர்பார்ப்போம். என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.