கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்றுடன்  முடிவடைந்து இன்று (07.6.20221) முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக காவல் சோதனைச் சாவடிகள் மற்றும் தடுப்புகள் அமைத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட மிக அத்தியாவசிய பணி மற்றும் முன்கள பணியாளர்கள் வாகனங்கள், இ-பதிவு சான்று பெற்றுள்ளவர்கள் தவிர்த்து, இ-பதிவு சான்று இல்லாமல் வாகனங்களில் செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுகப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பராமரிக்காமல் இருந்து வரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (07.6.2021) மாலை, வடபழனி மற்றும் 100 அடி சாலை சந்திப்பு, வடபழனி போரம் மால் மற்றும் ரத்னா ஸ்டோர், அசோக் நகர் 10வது அவென்யூசந்திப்பு, விருகம்பாக்கம் 80 அடி சாலை மற்றும் காசி தியேட்டர் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள வாகன தணிக்கை சாவடிகளுக்கு நேரில் சென்று காவல் குழுவினரின் வாகனத் தணிக்கை பணியினை பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்ட உரிய வழிகாட்டுதல்படி வாகன தணிக்கைகள்  நடைபெறுகிறதா எனவும் ஆய்வு செய்துஅதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்(போக்குவரத்து) திரு.பிரதிப்குமார், இ.கா.ப., இணை ஆணையாளர்கள்திரு.கே.எஸ்.நரேந்திர நாயர், இ.கா.ப., (தெற்கு மண்டலம்), திருமதி. பி.கே.செந்தில்குமாரி, இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு), துணை ஆணையாளர்கள் திரு.டி.என்.ஹரி கிரன் பிரசாத், இ.கா.ப., (தி.நகர்), திரு.என்.குமார் (போக்குவரத்து/தெற்கு), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடனிருந்தனர்.