118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார்

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவல் கட்டிடம் 1902ம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு.J.P.ஓஸ்வெல்டு ரூத்ஜோன்ஸ் எஸ்க் 1902 நவம்பர் 13 ம் நாள் அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்டு காவல் துறையின் பயன்பாட்டில் 118 ஆண்டுகளாக இருந்து வந்தது. இதில் சமீபத்தில் இயங்கி வந்த காவல் நிலையம் பின்னர் குற்றப்பிரிவு, விரல் ரேகை தடயபிரிவு, விபச்சார தடுப்பு பிரிவுகளுக்கு புதிதாக இடங்கள் ஒதுக்கப்பட்டதால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் 1902ம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான கட்டிடம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையாளர் அலுவலகமாக மாற்றப்பட்டது.

27.10.2020 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, புதுப்பிக்கப்பட்ட திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் ஆர்.தினகரன், இ.கா.ப, (தெற்கு) இணை ஆணையாளர் தெற்கு ஏ.ஜி.பாபு, இ.கா.ப, திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் G.தர்மராஜன், இ.கா.ப, நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் விமலா, மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.