இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியப் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் மாவ ட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா. இராதா கிருஷ்ணன் விருது” வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பேசியதாவது: மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவிடுகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர் களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு கல்வியறிவு வழங் குவதோடு அவர்களது தனித்திறன்களை மென்மேலும் வளர்த்திடவும் தன்னம்பிக்கை யுடன் சமுதாயத்தில் சிறத்த குடிமக்களாக உயர்த்திடவும் அயராது உழைக்கிறார்கள். இத்த கைய ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில நல்லாசிரியர் விருதான ‘டாக்டர். “இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி வருகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரி யர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது” வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒவ்வொரு ஆசியர்களின் கனவு விருதாகும். நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பேசினார். இவ் விழாவில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எம்.மணிகண்டன் மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன் மாவட்ட முத ன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் தெ.கல்பனாத்ராய் மாவட்ட கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி சோ.கருணாநிதி மு.முருகம்மாள் உட்பட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.