12 பிப்ரவரி 2021 அன்று வெளியாகிறது “குட்டி ஸ்டோரி”

எல்லா திரைப்படங்களும் வெளியீட்டின் போது ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் சில படங்கள்  படப்பிடிப்பிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆனால் வெகு சில படங்களே படம்அறிவிக்கப்பட்ட நாள் முதல் வெளியீடு வரை பெரும் உற்சாகத்தை அனைவரிடத்திலும் உண்டு செய்யும். அந்தவகையில் Dr. ஐசரி K கணேசன் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் வழங்கும் குட்டி கதை அப்படி யான தொரு படைப்பாக உருவாகிறது. தமிழ் மண்ணின் மிகச்சிறந்த இயக்குநர்கள் இணைந்து உருவாக்க, தரமான வகையிலும், விநியோக தளத்தில் லாபம் தரும் வெற்றி படங்களாக தொடர்ந்து தரும், Dr. ஐசரி K கணேசன் தயாரிப்பில் உருவாகும் “குட்டி ஸ்டோரி” இத்தனை எதிர்பார்ப்பை உருவாக்குவது என்பதுஆச்சர்யாமான விஷயம் இல்லை. ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனு பவத்தைதருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின்பெரும் நட்சத்திர பட்டாளமும், உயர்தர தொழில் நுட்ப குழுவினர் இணைந்து பணியாற்றி யுள்ள “குட்டிஸ்டோரி” திரைப்படம், ஆந்தாலஜி வகையில், ரசிகர்களுக்கு பிரமாண்டமான ஒரு புதிய அனுபவத்தைதிரையரங்கில் தரவுள்ளது. மனித மனங்களின் மென்னுணர்வுகளை மையப்படுத்திய நான்கு கதைகளை கூறும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமிஇணைந்து இயக்கியுள்ளனர். இந்த இயக்குநர்கள் அனைவருமே தங்கள் தனித் தன்மை மிக்க திறமையால்தரமிகு படைப்புகளை தந்து தமிழ் சினிமாவை முன்னெடுத்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றவர்கள் எனபெருமையுடன் கூறுகிறார் Dr. ஐசரி K கணேசன். மேலும் அவர் கூறும்போது… இந்த நீண்ட பொது முடக்ககாலத்திற்கு எந்த ஒரு தயாரிப்பாளரா கவும் முதல் கடமை என்பது திரையரங்குகளை ஆதரிப்பதே ஆகும். அதிலும் கமர்ஷியல் சினிமாவின் அங்கத்தில் பங்கு வகிக்கும் நான் திரையரங்கு வெளியீட்டை ஆதரிப்பது முக்கிய மான கடமை ஆகும். ரசிகர்கள் தியேட்டர்கள் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தி யுள்ள இந்ததருணத்தில் அவர்களுக்கான படங்களை தியேட்டரில் வெளியிடுவது நமது அனைவ ருடைய பொறுப்பு ஆகும். இதனை முன்னெடுத்து எங்கள் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் “குட்டி ஸ்டோரி” 12 பிப்ரவரி 2021 அன்று காதலர் தின கொண்டாட்டமாக, வெளியாகும் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். எங்கள்நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் குழு நண்பர்களின் ஆதரவில் இப்படத்தினை திரையரங்கில் வெளிடுகிறோம். மக்கள் தொடர்பு: டி.ஒன்.