பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா”

18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஐஸ்வரியா ராஜேஷ் நடித்த படம் “ட்ரைவர் ஜமுனா.” வழக்கமான பழிக்குப்பலி தீர்க்கும் படம்தான். அதை புதிய பாதையில் ஓட்டி செல்கிறார் இயக்குநர் கின்ஸிலின். வெந்நீர் பழையது என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது பழைய சோற்றில் வெந்நீரை ஊற்றி சூடாக்கி சாப்பிடுவார்கள்.  பழையதை,  பாராட்டும் விதத்தில் சூடாக்கியிருக்கிறார் இயக்குநர். தந்தையை கொன்ற அரசியல்வாதி ஆடுகளம் நரேனை பழி தீர்க்கிறார் ஐஸ்வரியா ராஜேஷ். அதற்காக அவர் செய்யும் முயற்சிகள் கைத்தட்ட  வைக்கிறது. கண் அசைவிலும் முகக் குறிப்பிலும் ஐஸ்வரியா கதையை நகர்த்துவது அற்புதமாக இருக்கிறது. படம் முழுக்க நெடுஞ்சாலையில் கார் ஓட்டினாலும் பாரவையாளர்களுக்கு  சலிப்பு தட்டாமல் இருக்க ஜிப்ரானின் இசை கை கொடுக்கிறது.  ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியை தருகிறது. பயம் சாதுரியம் தைரியம் ஆகிய உணர்ச்சிகள் ஐஸ்வரியாவின் முகத்தில் தாண்டவமாடுகிறது.