திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்.