இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போதுபின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தலைமையில் 19.08.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு தன்சுகாதாரம் பேணுதல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல் வேது பிடித்தல் (ஆவி பிடித்தல்) போன்று நடைமுறைகளை கடைபிடித்திட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட சத்தான உணவு வகைகள் பழங்கள் பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும் நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள் மிளகு இஞ்சி பூண்டு ஆகியற்றை அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் சமூக இடைளியை கடைபிடித்தல் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணி தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசு ஆணையின்படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ சந்தைகளுக்கோ செல்பவா;கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.10000 வருமானம் வரக்கூடிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத் தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும்; திருக்கோவில் நிர்வாகத்திற்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவா;கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாட தடை ஏதும் இல்லை. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ கூடாது. மேற்காணும் நிபந்தனைகளை கடைப்பிடித்து வருகின்ற 22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையினை அரசின் நிலைப்பாட்டின்படி மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடை பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி இராமநாதபரம் சார் ஆட்சியர் டாக்டர் சுகபுத்ரா இ.ஆ.ப. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.