7 பேர் விடுதலைக்காக இந்திய குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமெழுதியுள்ளார்.அதில், 2018 இல் அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு குடியரசு தலைவர் அலுவலகத்தில் அளித்தார்