வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார்

​​சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம்குற்றப்பிரிவில் அளிக்கப்படும் புகாரின் மீது உடனேவிசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பெறப்படும்பணபரிவர்த்தனை ஏமாற்றம் அடைந்த புகார்களில்உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது 

இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம்சிட்கோ நகர், 18வது தெருவில் வசித்து வரும் அன்பரசு, வ/62, த/பெ.பிச்சையப்பன் என்பவர் ONGC நிறுவனத்தில் வேலைசெய்து பணி ஓய்வு பெற்வர் ஆவார். கடந்த 25.05.2021 அன்று மதியம் சுமார் 03.30 மணியளவில் அன்பரசுவின்செல்போனுக்கு Pan Card Update செய்ய வேண்டும் என்றுவங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்திவந்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது செல்போன்எண்ணில் அழைத்து பேசிய நபர் தான் SBI வங்கியின்துணை மேலாளர் பேசுவதாகவும் தங்களின் Pan Card Update செய்ய வேண்டும் என்றும் அதற்காக தங்களின்செல்போன் எண்ணிற்கு வந்துள்ள குறுஞ்செய்திஅனுப்பியுள்ளதாகவும்தற்போது அனுப்பிய OTPஎண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்இதனைஉண்மையென நம்பிய அன்பரசு OTP எண்ணைஅனுப்பிய சில நிமிடங்களில் அன்பரசுவின் வங்கிகணக்கிலிருந்து சிறிது சிறிதாக என ரூ.53,25,000/- பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து, அன்பரசு 26.05.2021 அன்று V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபுகாரை அண்ணாநகர் காவல் மாவட்ட துணைஆணையர் திரு.G.ஜவஹர்இ.கா.ப., அவர்கள்கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சைபர்குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்து உடனேஅண்ணாநகர்காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன்(கா.46781) மற்றும் ராம்சங்கர் (கா.46193 ) ஆகியோர்துரிதமாக செயல்பட்டு அன்பரசுவின் பாரத ஸ்டேட் வங்கிநிர்வாகத்தில் விசாரணை செய்தபோது, எதிரிகள்அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.25,000/- ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் மற்றொரு வங்கிகணக்கிற்கு மாற்றியுள்ளதும், ரூ.53,00,000/- அவரதுவங்கி கணக்கில் Fixed Deposit ஆக பண பரிவர்த்தனைசெய்து பின்னர் OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சத்தைஅபகரிக்க திட்டமிட்டதும் தெரியவந்ததுஉடனே சைபர்குழுவினர் பரிந்துரையின்பேரில் வங்கி நிர்வாகம்அன்பரசுவின் Net banking அக்கவுண்டை நீக்கம் செய்து,பணபரிவர்த்தனை மூலம் மாற்றம் செய்யப்பட இருந்தரூ.53 லட்சத்தை திரும்ப அவரது சேமிப்பு வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்டது. மேலும்ஆன்லைன்பரிவர்த்தனையில் மோசடியான பணம் ரூ.25,000/- பணத்தையும் மீட்டு தருவதாக வங்கி நிர்வாகம்உறுதியளித்தது.

வங்கி அதிகாரி போல செல்போனில் பேசிஆன்லைன் மூலம் இழந்த தனது பணத்தை பெற்று தந்தஅண்ணாநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவிஆய்வாளர் ராஜாசிங் மற்றும் காவல் குழுவினருக்குநெகிழ்ந்து நன்றி கூறினார். அன்பரசு பாராட்டினார்.

மேலும்மேற்படி சம்பவத்தில் விரைந்து செயல்பட்டுபுகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இழந்தபணத்தை மீள பெற்றுத் தந்த அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜாசிங்காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் (கா.46781) மற்றும்ராம்சங்கர் (கா.46193) ஆகியோரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்இ.கா.ப., அவர்கள் நேற்று (27.5.2021) நேரில் அழைத்துப் பாராட்டிவெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.