கொரோனோவால் உயிரிழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட, மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு ( Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். பட்டபடிப்பு வரைக்குமான கல்வி கட்டணத்தை (விடுதிக் கட்டணம்) உட்பட அரசே ஏற்கும். கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும். ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும். அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்பு குழுவால் கண்காணிக்கப்படும்.